TNPSC-GROUP I: குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் 25 முதல் 27-ஆம் தேதி வரை குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது. பிரதான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சார் ஆட்சியர், காவல்துணைகண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது.
Posts
Showing posts from March 25, 2014
- Get link
- X
- Other Apps
5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது. இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், நில அளவர் ஆகிய பணியிடங்களில், காலியாக உள்ள,5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 4 போட்டி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 25ல் நடந்தது.இத்தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவை,அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணையஅலுவலகத்தில், நேற்று துவங்கியது. முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 200 பேர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேற்று தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வும், இன்று நடக்கிறது. ஏப்ரல், 1 முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு, தொடர்ந்து, மே 8 வரை நடக்கு...