வி.ஏ.ஓ., தேர்வு வினா முறையில் மாற்றம்; பகுதிகள் கடினமாக இருக்கும் என அச்சம். டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள வி.ஏ.ஓ., தேர்வு, புதிய வினாக்கள் முறையால்,கடினமாக இருக்கும் என தேர்வு எழுதுபவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15. ஜூன் 14 ல் எழுத்துதேர்வு நடக்க உள்ளது.கடந்த காலங்களில் வி.ஏ.ஓ., தேர்வில், 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலும், 100 வினாக்கள் பொதுஅறிவு தொடர்பாக கேட்கப்படும். ஆனால், தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வு வினாக்களில், மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுத்தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 80 வினாக்களும், திறனறி பாடத்தில் 20 வினாக்களும், பொதுஅறிவு பாடத்தில் 75 வினாக்களும், கிராமநிர்வாக அலுவலர் தொடர்பாக 25 வினாக்கள், என, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படவுள்ளது.பத்தாம்வகுப்பு படித்துவிட்டு, வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்கள், பழைய பாடத்திட்டத்தை விட, இந்த புதிய தேர்வு முறை, கடினமாக இருக்கும், என அச்சப்பட...
Posts
Showing posts from March 23, 2014