Posts

Showing posts from March 22, 2014
தேர்தல் காரணமாக குரூப்–1, குரூப்–2 தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 26–ந் தேதி நடத்த இருந்த குரூப்–1 தேர்வை ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.  அதுபோல மே மாதம் 18–ந் தேதி நடத்த இருந்த குரூப்–2 ஏ தேர்வு, தேர்தல் காரணமாக ஜூன் 29–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்–1, குரூப்–2, குரூப்– 2 ஏ, குரூப்–4 ஆகிய தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. குரூப்–2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வாகும். குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது தேர்தல் காரணமாக ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  அதுபோல மே மாதம் 18–ந் தேதி குரூப்–2 ஏ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16–ந் தேதி நடைபெறுவதால், அதைத் தொடர்ந்து மே 18–ந் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப்–2 ஏ தேர்வு ஜூன் மாதம் 29–ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா தெரிவ...
TNTET - ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., - 2 சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார். அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்தப் பணி, 31ம் தேதியுடன் முடிகிறது.  இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது. முதல் தாளுக்கு நடந்ததைப் போல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.