Posts

Showing posts from March 20, 2014
News update : இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை. சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு TET 2012 மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நடைபெறவில்லை விசாரணை நாளை (21.03.14)வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?  முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.  பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக 60 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தவாறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை பெற்றுள்ளதாக தெரிகின்றது.  இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் TRB அந்த நீதிமன்ற ஆணைகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு செய்யும் பட்சத்தில் அம்மனுக்கள்மீண்டும் நீதியரசர் சுப்பையா விசாரிப்பார்.  தற்போது மதுரை பெஞ்சில் உள்ள நீதியரசர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் நாளில் விசாரணை நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும். விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.  அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்-பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு.  தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு   குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது.  காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது. கலந்தாய்வு அட்டவணை தேர்வில் வெற்றி பெற்று கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்பட வில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும்.  இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது.  6,000 பேருக்கு அழைப்பு அதன்படி, பொது தரவரிசை
பட்டத்திற்கு பின் பிளஸ் 2: வேலை வழங்க உத்தரவு -தின மலர் நாளேடு  ‘பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்’ என, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ‘முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை’ என, காரணம் கூறப்பட்டது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார்.  அதன் பின், சென்னை பல்கலைக்கழகத்தின், திறந்தெவளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின், அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில், எம்.ஏ., பட்டம் பெற்றார். இதன் பின், பிளஸ் 2 தேர்வை, தனியாக எழுதி, தேர்ச்சி பெற்றார். ‘பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன், பிளஸ் 2 முடிக்காததால், ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்க வில்லை’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்டது.  வாரியத்தின் முடிவை எதிர்த