தகுதி இல்லாத ஆசிரியர்கள், கவலைப்படாத அரசு-Dinamalar Article கடந்த 2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒரு முக்கியமான அம்சம், பள்ளிஆசிரியர்களின் தகுதி குறித்தது. இதுதான், தமிழக சட்டசபையில் விவாதம் நடத்தக் கூடிய அளவிற்கு கொந்தளிப்புகளை ஏற்படுத்துகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்க, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011-ம் ஆண்டு, விதிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்க, புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியர்கள், பி.எட்., அல்லது டி.டி.எட்., படித்திருக்க வேண்டும். மேலும், அவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சி.டெட்.,டும், தமிழக அரசு பள்ளிகளுக்கு டி.என்.டெட்.,டும் தகுதி தேர்வுகள். எந்த நிதி உதவியும் பெறாத தனியார் பள்ளிகள், இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்கலாம்.ஏற்கனவே வேலையில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும், சட்டம் அமலுக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், தகுதி தேர்வை எழுதி, அதில் த...
Posts
Showing posts from March 18, 2014