சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவைப்பு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 21வழக்குகளும்விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் அட்வகட் ஜெனரல் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று ஆஜராக வில்லை. வழக்கின் முழுவிவரத்தையும் நீதியரசர் முன் வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். அட்வகட் ஜெனரல் இன்று ஆஜராக இயலாத நிலை உள்ளதால் வழக்கினை வேறு தேதிக்குஒத்திவைக்க அரசு சார்பில் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் வழக்கினை வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Posts
Showing posts from March 12, 2014
- Get link
- X
- Other Apps
2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு. 2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.4 வாரங்களுக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு.கடந்த 2012 நவம்பரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெற்றது.முடிவுகளை வெளியிடாமல் நேர்முகத் தேர்வுக்கு அழைத்ததாக கோபிகிருஷ்ணா என்பவர் வழக்கு.
- Get link
- X
- Other Apps
தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு -- தின மலர் நாளேடு அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் பாலமேடு கண்ணன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு: தகுதி தேர்வில்(டி.இ.டி) வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக அரசு நியமிக்கிறது. இதன்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதிகள் நிர்ணயித்து ஆசிரிய தேர்வு வாரிய (டி.ஆர்.பி)தலைவர் 2012ல் அறிவிப்பு வெளியிட்டார். அதில் டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பிளஸ் 2 பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்.பின் பணி நியமனம் மேற்க்கொள்ளப்படும். என உள்ளது. ஒவ்வொருவரும் பல்வேறு கால கட்டங்களில் பிளஸ் 2 பட்டம் படித்து வெளியேறுகின்றனர். இதனால் மதிப்பெண்ணில் அதிகம், குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிளஸ...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதல் தேர்ச்சி: இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி -- தின மணி நாளேடு ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு புதன்கிழமை (மார்ச் 12) தொடங்குகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச...