தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளம் கிடைக்கவில்லை தேர்வு எழுதியவர்கள் முடிவு தெரியாமல் அவதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வை 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தனர். இந்த நிலையில் நேற்று குரூப்-4 தேர்வு முடிவு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த முடிவை நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் பார்ததனர். முடிவு வெளியிட்டது தெரியாத பலர் முடிவை பார்க்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்க்க முயற்சி செய்தனர். ஆனால் பல இடங்களில் அந்த இணையதளம் ஆன் ஆகவில்லை. இது பற்றி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவரிடம் இரவு 7 மணிக்கு கேட்டதற்கு, நீங்கள் சொல்வது உண்மைதான். இரவு 9 மணிக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 12 லட்சம்பேர்களும் இந்த இணையதளத்தை பார்ப்பதால் பிரச்சினை இருக்கலாம். நாளை வேறு இணையதளத்தில் முடிவை வெளியிட ஏற்பாடு நடக்கும் என்று அதிகாரி தெரிவித்தார்.
Posts
Showing posts from March 6, 2014
- Get link
- X
- Other Apps
12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் தெரிந்து கொள்ளலாம். 12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரமும், மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் ரேங்க் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முதலாக இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– 12 லட்சம் பேர் எழுதினார்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கு 5,855 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை 12 லட்சத்து 22 ஆயிரத்து 272 பேர் எழுதினார்கள். தேர்வின் விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு பல முறை சரிபார்க்கப்பட்டு முடிவு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய( www.tnpsc.gov.in)இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 300 மதிப்பெண்ணுக்கு தேர்வ...