Posts

Showing posts from March 5, 2014
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன  முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (05.03.14) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன், வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன. வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (06.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET வழக்குகள்  இன்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு (06.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு. அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் உட்பட 5,855 காலிப்பணியிடங்களுக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தேர்வு நடைபெற்றது. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் நவனீதகிருஷ்ணன் இத்தகவலை தெரிவித்தார்.
டெட்- தேர்வில் கூடுதல் தேர்ச்சி: நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை மூலம் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90) மதிப்பெண் எடுத்து 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் தேர்வில் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு
ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு. ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து உள்பட, ஏழு அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச், 6ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதற்காக அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்குசெல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் மார்ச், 6ம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த போதிலும், மார்ச், 6ம் தேதி எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரியர்களை பயன்படுத்தி பள்ளியை நடத்த முடிவு செய்துள்ள கல்வித்துறை, இதற்காக போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை கேட்டுள்ளது.  துவக்க, நடுநிலைப்பள்ளியின் சாவி அந்த
மதுரைக் கிளையில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள். .  முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்மதுரைக் கிளையில் இன்றைய (05.03.14) இடம்பெற்றுள்ளன. நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET 2012 relaxation 5% MARKS வழக்குகள் நேற்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS 12 writs  2.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL-3 writs  3. EQUALENCE  4. WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES  5..WRIT PETITIONS RELATING TO SECONDARY GRADE ASSISTANT/ B.T. ASSISTANT/ நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்