Posts

Showing posts from March 1, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அச்சம்! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பணி நியமனம் பாதிக்கப்படுமோ? நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள். சான்றிதழ் சரிபார்ப்பு: அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தகுதி 5 சதவீதம் குறைக்கப் பட்ட நிலையில், கூடுதலாக 45 ஆயிரத் தும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள். முதல்கட்டமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. புதிதாக தேர்ச்சிபெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்க்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் அச்சம் இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என...
"டிட்டோஜாக்': மார்ச் 6ல் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்'. மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாகஅறிவித்துள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், பிப்., 25, 26 ல் போராட்டம்நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, "டிட்டோஜாக்' அமைப்பினரும், மார்ச் 6ல், போராட்டம் அறிவித்துள்ளனர். இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களை (டிட்டோஜாக்) சேர்ந்த, ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் முருகன் கூறுகையில், ""மதுரை மாவட்டத்தில் 3,000 ஆசிரியர்கள்வேலை நிறுத்தத்தில்...
சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்ச் 3ல் TRB. PG வழக்குகள்:நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார் சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG /TET I/TET II உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதன் காரணமாக தமிழ் தவிர்த்த பிற PG பாடங்களுக்கான பணி நியமனம் தள்ளிப்போனது.  இந்நிலையில் மார்ச் 3 முதல் இவ்வழக்குகளை நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார் ..TRB வழக்குகள் பலவற்றை   விரைந்து விசாரித்து தீர்ப்பு அளித்துள்ள நீதியரசர் தற்போது நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளையும் விரந்து விசாரித்து தீர்ப்பளிப்பார் என தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
மதுரைக்கிளையில் TRB வழக்குகள் விசாரிக்கும் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாற்றம் மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள TRB வழக்குகளை மார்ச் 3 முதல் நீதியரசர் கே.ரவிச்சந்திர பாபு அவர்களும் ,முதுகலை ஆசிரியர் தமிழ் அப்பீல் வழக்குகளை நீதியரசர்கள் வி.இராமசுப்ரமணியம்,வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வும் விசாரிக்கக்கூடும் என தெரியவருகின்றது.