Posts

Showing posts from February 28, 2014
நெட் தேர்வில் ஓ.பி.சி.,மாணவர்கள் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது  நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது. அதுதொடர்பாக கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள் 55% பெற்றாலே போதுமானது.  இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும் இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில் வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.  நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில் காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பா...
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்துவழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.  இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் என்ன விவரங்கள் அடங்கியுள்ளன என்பது பற்றி, வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் பொழுது விவரம் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.  விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்-Dinamalar  ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.  55 சதவீதம் டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.  டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது.  ...
ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு  ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, முடிவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை தளர்த்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இடஒதுக்கீட்டு பிரிவினர் 150–க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப.சபிதா அரசாணை வெளியிட்டார்.  இதையொட்டி, ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை தவிர, புதிதாக 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.