PG-TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் பொருளாதார பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி .திருத்தி அமைத்துள்ளது பொருளாதார பாடத்தில் 51 பேர் கொண்ட பட்டியலில் 5,6,19,26,45,51 ஆகிய வரிசை எண்கள் withheld என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது வரிசை எண் 45 தவிர்த்து மற்ற 5 இடங்களுக்கும் உரிய தேர்வர்கள் பெயர்சேர்க்கப்பட்டு புதிய பட்டியலை TRB இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Posts
Showing posts from February 24, 2014
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு எழுதி ஆறு மாதமாகியும் ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்4ல், 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர் எழுதினர். கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும், ஏராளமான பட்டதாரிகளும் தேர்வை எழுதினர். தேர்வு நடைபெற்ற போது, மையத்தை பார்வையிட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் 3 மாதத்தில் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்படும் என்று கூறினார். குறிப்பாக விடைத்தாள் திருத்தும் பணி 95 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால், தேர்வு முடிவு வெளியிடப்படுவதற்கான அறிகுறியே தென்படவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவுகளை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படவில்லை என்றால், மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி விடும். அந்த நேரத்தில் அதிகாரிகள் தேர்தல் பணியில் முழு கவனத்தை செலுத்த தொடங்கி விடுவார்கள். இதனால் தேர்வு முடிவு வெளியிடுவதி