2012 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அ .சவுந்தரராசன் கோரிக்கை விடுத்துள்ளார்
Posts
Showing posts from February 23, 2014
- Get link
- X
- Other Apps
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிப்.26 ல் "ஸ்டிரைக்' : 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வலியுறுத்தி, பிப்.,26 ல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல்; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிடில், போராட்டத்தில் ஈடுபடுவதென, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் முடிவு செய்திருந்தனர். இது தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் காமராஜ், பொது செயலாளர் ரங்கராஜன், பொருளாளர் ஜோசப் சேவியர் உள்ளிட்டோர், தொடக்க கல்வி இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டவில்லை. மாநில பொது செயலாளர் ரெங்கராஜ் கூறுகையில், "7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி, பிப்., 25 ல் நடக்கும் உள்ளிருப்பு போராட்டத்திலும், 26 ல் நடக்கும் வேலைநிறுத்தத்திலும
- Get link
- X
- Other Apps
எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா? சென்னைமேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு. ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில், கலந்து கொண்டு மேயர் சைதை துரைசாமி, ‘‘நல்ல நல்ல ள்ளைகளைநம்பி, ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் போன்ற எம்ஜிஆர் பாடல்களை மேடையில் பாடிகாட்டினார். மேலும், நான் பாடிய பாடலை அடி மாறாமல், வார்த்தை மாறாமால் ஆசிரியர்கள் பாட வேண்டும். அப்படி முழுபாடலையும் சிறப்பாக பாடினால் அவர்களுக்கு 500 பரிசு வழங்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்தார். இதனால் சில ஆசிரியைகள் அந்த பாடல்களை பாட முயன்றனர். சில இடங்களில் சுருதி குறைந்துபோனது. சில இடங்களில் வார்த்தை மாறியது. அவர்களால் சில வரிகளுக்கு மேல்பாட முடியவில்லை.உடனே ‘என்ன டீச்சர் நீங்க.. ஒரு எம்ஜிஆர் பாட்டு முழுமையாக தெரியவில்லை. நீங்கல்லாம் பிள்ளைகளுக்கு என்னத்த பாடம் சொல்லி கொடுக்கபோகிறீர்கள