ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில்152பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு16பேரும், ஆங்கில பாடத்திற்கு74பேரும், கணித பாடத்திற்கு27பேரும், அறிவியல்14பேரும், சமூக அறிவியல்21பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Posts
Showing posts from February 21, 2014
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் (ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன அவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அன...
- Get link
- X
- Other Apps
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை)என 2 வகையாக இருக்கின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை ப...
- Get link
- X
- Other Apps
முதுநிலை பட்டதாரிகளுக்கு இன்று ஆன்லைன் கவுன்சலிங் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று கவுன்சலிங் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற 593 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்கிறது. தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் தாங்கள் விரும்பிய இடங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக தெரிவு செய்யலாம். கவுன்சலிங் ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும். முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விரும்புவோருக்கான கவுன்சலிங்கும் நடக்கும். தமிழ்ப்பாட முதுநிலை பட்டதாரி ஆ...
- Get link
- X
- Other Apps
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கை கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்,நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின்6சங்கங்கள் இணைந்த டிட்டோஜாக் சார்பில் வலியுறுத்தப்பட்ட7அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி வரும்22ம் தேதி வேலூரிலும், 23ம் தேதி கடலூரிலும்,மார்ச்1ம் தேதி காலை மதுரையிலும்,மாலை திருச்சியிலும்,மார்ச்2ம் தேதி கோவையிலும் ஆசிரியர் மன்றத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர பொறுப்பாளர்களும்,உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மார்ச்6ம் தேதி நடைபெற உள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திலும் ஆசிரியர் மன்றத்தினர் முழுஅளவில் கலந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு மார்ச்6ம் தேதிக்குள்7அம்ச கோரிக்...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ் - தி இந்து ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 சதவீதம் சலுகை அளித்து,தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டது.அதன்படி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 82.5 வரும், ஆனால், தகுதித்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்தான் வழங்கப்படும். அரை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை. 10 ஆயிரம் பேர் தப்பினர் எனவே, தேர்ச்சி மதிப்பெண் 82.5 என்பதை முழு எண்ணாக மாற்றி 83 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தேர்வெழுதியவர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வைப் போன்று தமிழக அரசும் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்தது. அதற்கான அரசாண...