Posts

Showing posts from February 20, 2014
"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது "ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.  டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும்,மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை,அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள்மட்டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும்சிக்க...
2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர, மற்ற சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி,தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது.  இது, 2013 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும்பொருந்தும். இது ஒருதலைப்பட்சமானது.நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியடைந்து விடுவேன். 2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும், என குறிப்பிட்டார்.  நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீ...
முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரியகல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராகவேண்டும்-பள்ளி கல்வி இயக்குனர் "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர்பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில்,21.02.14 காலை, 10:00 மணி முதல், இந்த கலந்தாய்வு நடக்கும்.  டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி,பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்குப் பின்,பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.  தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரியகல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நே...
தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை ரத்து செய்யக் கோரி வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்-Dinamalar  ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர். பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐேகார்ட் கிளை உத்தரவிட்டது.  திருச்சி தென்னுார் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சத வீதம் பேர் தேர்ச்சியைடந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர, மற்ற சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது.  இது, 2013 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது ஒருதலைபபட்சமானது. நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியைடந்து விடுவேன். மதிப்பெண் சலுகை வழங்கிய, அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்....
அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி., – தின மலர் நாளேடு ‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.  டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.  கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சத வீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட் டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.  ஏனெனில், தேர்ச்ச...
முதுகலை ஆசிரியர்: 4 பாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில்  விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கானஇறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம்(18.02.14) இரவு வெளியானது. ஹோம்சயின்ஸ் பாடத்துக்கான இறுதிப்பட்டியலில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனால், ஹோம் சயின்ஸ் தவிற பிற நான்கு பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில்,""தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும்,எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,''என்றார்.