Posts

Showing posts from February 17, 2014
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22 சனியன்று பணி நியமன கலந்தாய்வு? ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆசிரியர் தேர்வுவாரியம் தனித்தனியாக தேர்ச்சி கடிதம் அனுப்பியுள்ளது.அவர்களின் பெயர் பள்ளிக்கல்வித்துறைக்கு பணிநியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.  பள்ளிக்கல்வித்துறை பிப்ரவரி 22 சனியன்று அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தவுள்ளதாகவும், கலந்தாய்வு சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியல் தயார் இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014) சந்திக்க திட்டமிட்டுள்ளது.  இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.  இவ்வழக்கு சம்பந்தமாக திரு.இரா.கணேஷ்(9976105153), திரு.மு.கலியமூர்த்தி (9894718859), திரு.ப.பாண்டியன் (9894192500) ஆகிய மூவரையும் இக்குழு நியமித்துள்ளது .
TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்17 .02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .  மீண்டும் அடுத்தவாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TET 2013 விரைந்தது பணிநியமன ஆணைவழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு TET 2013 விரைந்தது பணிநியமன ஆணைவழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு ஆசிரியர் தகுதித்தேர்வில் (2013) தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள், தங்களுக்கு விரைந்தது பணிநியமன ஆணை வழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.  அதற்காக இன்று( 17.02.2014) சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஆசிரியர் தேர்வுவாரிய உயர் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கமுடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலி!  " அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். காரைக்குடியில், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.  பொதுச் செயலர் தினகரன் கூறியதாவது: தமிழகத்தில், 41, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 35, உதவி பெறும் பாலிடெக்னிக்குகளும் உள்ளன; 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 150க்கும் மேற்பட்ட, துறைத் தலைவர், பணியிடம் காலியாக உள்ளது. தமிழகம் முழுவதிலும், தற்போது, ஆறு, துறைத் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள், பொறுப்பு அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர்.  1 : 20 என்ற அளவில், ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும்; ஆனால், தற்போது, 1 : 110 என்கிற அளவில், ஆசிரியர்கள் உள்ளனர். பாலிடெக்னிக்குகளில், 90 சதவீதம், பகுதி நேர ஆசிரியர்கள் தான் உள்ளனர். இவர்கள், 15 ஆண்டுகளாக, சம்பள உயர்வின்றி தவிக்கின்றனர். தேர்வுப் பணியில
2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி-நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமன ஆணை  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றபின் இணையான பட்டம் இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் வழக்குமன்றத்தை நாடினர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.  அதனை அமுல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சம்மந்தபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் சென்று பணயிடத்தை தெரிவு செய்தபின் இணைஇயக்குனரால் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.