மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள் 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. நேரடி டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முன்பு நேரடி டி.இ.ஓ. நியமனத்துக்கு ஒரேயொரு தேர்வுதான் நடத்தப்பட்டு வந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் படித்த பட்ட மேற்படிப்பில் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண் கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்து நேர்முகத் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 40 மதிப்பெண். தேர்வு முறையில் மாற்றம் பின்னர் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் சேர்த்து (340) அதன் அடிப்படையில் கட் ஆப் மார்க் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தே
Posts
Showing posts from February 15, 2014
- Get link
- X
- Other Apps
TET I சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன். 17 .02.14ல் பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து அரசாணை 252 ஐ இரத்து செய்யக்கோரி வழக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காகவழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும்முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யஅரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும்,பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ.ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில்பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன். 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது. அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும்பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண