Posts

Showing posts from February 13, 2014
15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு.  தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில், அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்" என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.எட்.,) ஆசிரியர்கள், தஞ்சையைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர்.தொடர்ந்து இவர்கள் அளித்த மனுவை கலெக்டர் சுப்பையன் வேறு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் பிரிவு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.  மேற்கண்ட கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.எட்.,) படிப்பு முடித்து விட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் பாதித்து, குடும்பம் நடத்த வழியின்றி தவிக்கின்றனர்.அரசு பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இவற்றில் போதுமான காலிப்பணியிடங்கள் இருந்தும், அப்பணியிடத்தில் வ...
அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி. அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட வுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்ப தால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.  அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீ தத்தில் இருந்து 55 சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேர்ச்சி பெற 150-க்கு 82 மார்க் பெற்றால் போதும். இதன்மூலம் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் கூடுதலாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெ...
டி.இ.டி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே (முதல்தாள்)ஆசிரியர்குரலின் வேண்டுகோள் : 1.அருகில் உள்ள அரசுபள்ளிக்கு செல்லுங்கள்,அங்கு ஆசிரியர் மாணவர் விகிதத்தை பாருங்கள்.  2.உங்களுக்கு அதிர்ச்சியாயிருக்கும்.பரவாயில்லை.  3.அந்த தலைமையாசிரியருடன் பேசுங்கள்.  4.இம் மாதம் முதல் அப்பள்ளிக்கு சென்று மாணவர் சேர்க்கை உயர்த்த உதவி செயுங்கள்.  5.மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே உங்களுக்கு பணி.  6.இது சிறிய ஆலோசனை ,இருப்பினும் ஒவ்வோர் பள்ளிக்கும் ஓரிருவர் ஆர்வம் காட்டினால் இந்த எண்ணம் வெற்றியாகும். வாழ்த்துக்கள்!
"டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?-தினமணி அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும்தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அட...