Posts

Showing posts from February 9, 2014
பிளஸ்டூ மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்! முறைகேடுகளை தவிர்க்க கல்வித்துறை ஏற்பாடு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே, மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை, அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக் கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய விடைத்தாளை "பார்கோடிங்' முறையில் மட்டுமே, அடையாளம் காணும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தற்போது மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும் முறையிலும் புதுமை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்ட மையங்களில், வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில் தேர...