Posts

Showing posts from February 8, 2014
இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது இரட்டைப்பட்டம் செல்லாது எனவும்,பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம்செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணி நியமன ஆணை மே மாத இறுதியில் வழங்க கோரிக்கை. தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி: பணியில் சேர மே மாதஇறுதியில் நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை.ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில்தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான நியமன ஆணை மற்றும் பணியில் சேரும் காலத்தை மே மாத இறுதியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் -அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது. கோரிக்கை : மனுதமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை தலைவர் அபூபக்கர் சித்திக், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில்கூறி இருப்பதாவது:- ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு செய்திருப்பதை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை வரவேற்கிறது. தனியார்பள்ளிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தான் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தான் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப...
சலுகை மதிப்பெண்ணால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகே பணிநியமனம்? ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு,அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும் என டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன.