Posts

Showing posts from February 4, 2014
PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று (04.12.2014 ) வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி விசாரணைக்கு வந்தன இவை 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இவ்வழக்குகளில் 26.11.13 க்குப்பின் தாக்கலான வழக்குகள் அனைத்தையும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதியரசர் ஆர் சுப்பையா மற்ற வழக்குகளுக்கு டிஆர்பி பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்குகளை ஒத்திவைத்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 55 சதவீத நடைமுறை பொருந்த வேண்டும் கி.வீரமணி கோரிக்கை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித்தேர்வில் அனைவருக்கும் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பதை சற்றே தளர்த்தி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு 55 சதவீத மதிப்பெண், தகுதி மதிப்பெண் என்று அறிவித்துள்ளார். இதனை முதல் நிலையிலே வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியோர்க்கும் இடையிலான தகுதி மதிப்பெண் 20 இருக்கும்போது, இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படியாகப் பின்பற்றப்படும் தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் நின்று எடுத்துக்காட்டாக இருப்பதற்குப் பதிலாக பின் தங்கி இருப்பது எந்த வகையில் நியாயம்?. குறைந்த பட்சம் ஆந்திராவில் பின்பற்றப்படும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். ஒரே வகையான தகுதித்தேர்வில் 2012–ல் தேர்வுக்கு ஒரு அளவுகோல், 2013–ல் த
ஆசிரியர் தேர்வு மதிப்பெண் தளர்வு; அரைக் கிணறு தாண்டினால் போதாது : பாமக நிறுவனர் ராமதாஸ்  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது முழுமையான பயனை அளிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்கள் 60 விழுக்காட்டிலிருந்து 55 விழுக்காடாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல. கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் சராசரியாக 5 விழுக்காட்டினர் கூட தேர்ச்சி பெற முடியாததற்கு அதிக அளவிலான தேர்ச்சி மதிப்பெண் தான் காரணம் ஆகும்.  இதைக் கணிசமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், வெறும் 5% மட்டும்குறைத்திருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போடுவதைப் போன்றதாகும்.சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் பெயரளவுக்கு சலுகை வழங்குதல் போன்ற அரைக் கிணறு தாண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.  எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்க
டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.  டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர்.  தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் ( http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது.  இப்போது, கூடுதலாக தேர்ச
ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல். ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.எனவே, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முழு மதிப்பெண் 150. இதில் இதில் 55 சதவீதம் என்பது 82.5 மதிப்பெண்களாகும்.  தகுதித் தேர்வை பொருத்தவரையில், ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது.அரை மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில், 150-க்கு 82.5 மதிப்பெண் எடுத்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். தேர்வில் அரை மதிப்பெண் இல்லாததால் தேர்ச்சி மதிப்பெண்ணைகணக்கிடுவது சிரமமாக இருக்கும்.எனவே, தேர்ச்சி மதிப்பெண் 83 ஆக உயர்த்தப்படுமா அல்லது 82 மார்க் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 83 அல்லது 82 என்ப
ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்சலுகை தொடர்பான மதிப்பெண் எவ்வளவு என்பது அரசாணையில் அறிவிக்கப்படும் கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.  மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார். 2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்)எடுக்க வேண்டும். இதில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82.5மதிப்பெண்ணாக குறைந்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண்வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என்பதால் அரை மதிப்பெண் கிடைக்காது. எனவே, சலுகைக்குப் பிறகு 82 அல்லது 83, இவற்றில் எது தேர்ச்சி மதிப்பெண் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். சி.பி.எஸ்.இ. நடத்
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு. ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும். தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை.  இது சட்டவிரோதமானது. எனவே உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகையை இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ் தமிழக அரசு அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, இருந்தாலும் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டும் என்று வக்கீல்கள் பழனிமுத்து, ரமேஷ் ஆகியோர் கூறினர்.
டிஇடி சான்று சரிபார்ப்பில் 300 பேர் ஆப்சென்ட் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் 300 பேர் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர். அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ( தாள்1), 18ம் தேதி(தாள் 2) நடந்தது.இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர்.  இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் சான்று சரிபார்ப்பு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. 27ம் தேதி முடிய வேண்டிய நிலையில், கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.   கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கடைபிடிக்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் போடும் முறையில் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.  அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேற்காணும் விவரம் கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிவத்தில் ஆசிரியர் பணிபுரியும் ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் பதவி, அரசு உதவிப் பெறும் பள்ளி வகை (சிறுப்பான்மை / சிறுப்பான்மை அல்லாதது) , பணியிடம் காலி ஏற்பட்ட நாள், நியமன நாள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்படாததற்கான காரணம் ஆகிய விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (04.02.14) விசாரணைக்குவருகின்றன  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி நாளை 04.12.2014 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இவை 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்  இந்த PG/TET I / TET II வழக்குகள் மீது இன்று மாலை நீதியரசர் உத்தரவு பிறப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் நிலை இன்று மாலை தெரியவரும்.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று( 03.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம்பெற்றிருந்தது. இன்று வழக்கு விசாரணை நிலையை எட்டவில்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது .