Posts

Showing posts from February 3, 2014
PG Tamil medium 2011-12 provisional selection list released by TRB
ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி? ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல்வர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவித்தார். கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார். 2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார். இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில் முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன் தொடர்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் ஜெயலலிதா  பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர்ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை,19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220பணியிடங்கள் நிரப்பப்ப...
ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வ ர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வர் ஜெயலலிதா  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.  மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை:ஜெ., அறிவிப்பு more details you see puthiyathalaimurai news
நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்-கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நிறைவேற்றினர்.  கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை கூட்டத்தில், வேலூர், கடலூர் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகள், 500 பேர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:  1.ICT கணினி கல்வி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது. திட்டம் முறையாக அறிவிக்கப்படும் சூழலில், ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது. சென்னையில் டி.ஆர்.பி., வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது.  2.ஆறு முதல் பத்த வரையிலான வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கணினி பாடதிட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.  3. கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேர ஆசிரியர்க...
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி. மாநிலம் முழுதும் டிட்டோ ஜாக் பேரணி, ஆர்ப்பாட்டம். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.  #ஆசிரியருக்கான தகுதித் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்  #இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்  # தமிழ், வரலாற்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.  #தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயிக்க வேண்டும்.  #புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  # தொடக்கக் கல்வித்துறையில் தமிழ் வழிக் கல்வி முறையை தொடர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில்மாநிலம...
லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும்-ஆசிரியர் கூட்டணி  தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின்அதிருப்தி எதிரொலிக்கும்,'' என, ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர்,செந்தில்குமார் கூறினார்.  தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்,கூட்டு நடவடிக்கைக் குழுவின், நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில், நேற்று,கோரிக்கைப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், :தமிழகத்தில், 1.75 லட்சம்,தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான, ஊதியம் வழங்கவேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை, ஆட்சிக்கு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள், ஏற்க மறுக்கின்றன.  இடைநிலை ஆசிரியர்களுக்கான, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற, கோரிக்கையும்ஏற்கப்படவில்லை. தமிழகத்தில், பல தனியார் பள்ளிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தகுதியற்ற நிலையில் இருப்பினும், அவை, தொடர்ந்து இயங்க, அரசு ஊக்குவிக...