சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடுவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். இதற்கு அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார். அமைச்சர் உரிய விளக்கம் தரவில்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால் சட்டப்ப்பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
Posts
Showing posts from February 1, 2014
- Get link
- X
- Other Apps
கணினி பட்டதாரிகள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் கணினி பட்டதாரி ஆசிரியர்கள், தொடர்ந்து பணி வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், ஆசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இதையடுத்து, வரும் 2ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். கணினி பட்டதாரி ஆசிரியர்கள், இதுவரை, 175 பேர் மட்டுமே முறையான அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போது, மாவட்டத்தில், 300 பேர் பி.எட்., பட்டம் பெற்று வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.பகுதி நேர ஆசிரியர்களாக, 210 பேர் பணியாற்றி வருகின்றனர். திட்டம் வரும் மார்ச் மாதம் முடிவடையும் நிலையில், இவர்களின் பணி குறித்து, அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒப்பந்த அடிப்படையில், 4,430 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, பட்டதாரிகளிடையே தகவல் பரவி வருகிறது. இதனால்,குழப்பத்தில் உள்ள கணினி பட்டதாரி கள் வரும், 2ம் தேதி, ஆர்.கே.பேட்டையில், கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.இதில், தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். தங்
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பணி வழங்க பரிசீலனை, நீதிமன்றம் உத்தரவு! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு. இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி கிராபோர்டு ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாஜூதாபர்வீன்(வயது 33). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:"நான், பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.சி.ஏ பட்டப்படிப்பு படித்தேன். அதன்பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். இதன்பின்பு, இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 2009ஆம் ஆண்டு பி.எட் முடித்தேன்.இதன்பின்பு, பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். கடந்த 21.7.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்து கொண்டேன். 91 மதிப்பெண்கள் பெற்று அந்த தேர்வில் வெற்றி பெற்றேன். பதிவு மூப்புக்காக ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதன்பின்பு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டேன்.இதனால், எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் எ
- Get link
- X
- Other Apps
இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல் அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல்அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்: வெயிட்டேஜ் முறை இரத்து செய்திட வழக்கு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர். இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்