Posts

Showing posts from January 29, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் NEWS UPDATE சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றய (29.01.2014)விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் விவரம் 1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I- FILED AFTER 26.11.2013 - No of writs 20 2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II -FILED AFTER 26.11.2013 -no of writs (more than )-74. 3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL- number of writ 1 இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன. இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள். தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பணி நிரந்தரம் செய்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஆசிரியர்கள் கவலையின்றி இருந்தால் தான் மாணவர்களை இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாக்க முடியும். ஆனால்,தமிழக அரசின் தெளிவற்ற கொள்கைகளால் அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஆசிரியர்கள் தினக்கூலி தொழிலாளர்களைவிட குறைந்த ஊதியம் பெற்று வாடிவருகின்றனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி,ஓவியம்,கணினி,தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்16,549பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 05.03.2012அன்று தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நேர்காணல் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு3அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றாலும்,அனைத்து பணி நாட்களிலும் முழு நேரமும் இவர்கள் பணியா...
டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை-Dinamalar    ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு,அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர்ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார். இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என,எச்சரித்து உள்ளார். இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து,டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில்,தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின்கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய மு...