Posts

Showing posts from January 27, 2014
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை கருணைமதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் இன்று (27.01.2014 )உத்தரவு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் இன்று(27.01.2014 )உத்தரவு.முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். ஏற்கனவே நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இன்றும் அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன. பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த வேடியப்பன், சாந்தி,முத்துலட்சுமி,உள்ளிட்ட பல மனுதாரர்க...
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை): அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர். பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர். நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர். சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை - தூத்துக்க...
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து,எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா...
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி, மாற்றுத்திறனாளி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 618 ஓவர்சீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன இந்த பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் எனக்கு ஓவர்சீயர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.  இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தாழை.முத்தரசு ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, “சட்டத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்த...
"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை சிவகங்கை: "பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம்.  2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாற்றினர். இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள் தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.  இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2 தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில...