Posts

Showing posts from January 25, 2014
அனைவருக்கும் Teachers Recruitment Newsன் குடியரசு தின விழா வாழ்த்துக்கள்
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப்பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள3ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர். இதில்12,596இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர்.3ஆயிரம் பணியிடங்களுக்கு12ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால்,இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள
தேர்வு நடந்து ஓராண்டாகியும் குரூப்-2 ரிசல்ட் வரவில்லை- பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு முடிவு வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய 8 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப குரூப்-2 தேர்வும், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை உள்ளடக்கிய பதவிகளை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வும் டிஎன்பிஎஸ்சி மூலம் தனித்தனியே நடத்தப்படுகிறது. முன்பு, குரூப்-2 என ஒரே தேர்வாக நடத்தப்பட்டது. தற்போது நேர்காணல் உள்ள பணியிடங்களுக்காக குரூப்-2, நேர்காணல் இல்லாத பணியிடங்களுக்காக குரூப்-2ஏ என பிரித்து நடத்தப்படுகிறது. அந்த வகையில், 1,069 நேர்காணல் பதவிகளையும், 2006 நேர்காணல் அல்லாத பதவிகளையும் நிரப்பும் வகையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. 8 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். தேர்வர்கள் ஏமாற்றம் இந
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு 'கட் ஆப் மதிப்பெண்' கணக்கீடு- 'பிளஸ் 2' மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கட் ஆப் மதிப்பெண் கணக்கீட்டின்போது பிளஸ்-2 மார்க் பார்க்கப்படுவதால் பழைய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டவர்கள் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியையும், ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியையும் பெற்றனர். தகுதித்தேர்வு, பிளஸ்-2 தேர்வு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் (வெயிட்டேஜ் மார்க் முறை) இடைநிலை ஆசிரியர்களும், தகுதித்தேர்வு, பிளஸ்-2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களும் பணி நியமனத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் பிளஸ்-2 தேர்வில் ஓரளவு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களே எளிதாக 1200-க்கு 950 மார்க், 1,000 மார்க்குக்கு மேல் எடுத்து வருகிறார்கள். மாநில அளவில் ரேங்க் எடுக்கும் மாணவர்கள் 1,200-ஐ நெருங்கி விடுவதுண்டு. எனவே, இப்போதெல்லாம் எஸ்
TRB PG TAMIL, TET CASE UPDATE 24.01.14 முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் இன்று (24.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மிக முக்கியமான வழக்கு ஒன்றின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் விசாரணை செய்யப்படவில்லை.  வரும் திங்களன்று ( 27.01.14 ) சில வழக்குகள் நீதிமன்ற ஆணைக்காகவும். சிலவழக்குகள் புதியதாகவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.அதன் முடிவு அன்று மாலை தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.