பிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் பேரணி இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது . தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் பாலசந்தர், தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 1988ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று வந்தோம். ஆனால் 6வது ஊதியக் குழுவின் படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் ரூ.5,500 குறைத்தனர். இதை எதிர்த்து கடந்த 3 ஆண்டு காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை. அதோடு ஊதியக் குழுவில் ஆசிரியர்களின் கல்வி தகுதியை ஏளனம் செய்து தமிழக அரசு அறிக்கை தந்தது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கவில்லை. மேலும் ஆச
Posts
Showing posts from January 24, 2014
- Get link
- X
- Other Apps
58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்! மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர், 10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்தார். கடந்த ஆக.,18ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள்2ல் தேர்ச்சி பெற்றார்.மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். இவருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தால், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.ஓய்வு பெறும் ஆண்டிலும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற மதியரசுவின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. மாலை இதன் முடிவுகள் தெரியவரு ம்.
- Get link
- X
- Other Apps
"பதிவு மூப்பிற்க்கு மரியாதை" - SSTA வேண்டுகோள்!!! தற்போது நடைபெற்று வெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் நியமன முறைகளுக்கான மதிப்பெண்களில் வேலைவாய்ப்பில் பதிந்து வைத்திருக்கும் கால அளவிற்கும் மதிப்பெண் வழங்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் வலியுறுத்துகிறது. கடன் வாங்கி,நிலங்களை விற்று படிக்க வைத்த பெற்றோர்களை ஊக்குவிக்கவாவது அரசு தலையிட்டு மதிப்பெண் வழங்க முன்வரவேண்டும்.