சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு: இணை இயக்குனர் பேட்டி "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதில், தாள்-1ல் 12,600 ; தாள்-2ல் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் சரிபார்க்கப்படும். மாவட்டந்தோறும் ஜன.,20 முதல் 27 வரை இப்பணி நடக்கிறது.அனைவருக்கும் பணி கிடைக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. சிவகங்கையில், ஆய்வுக்கு வந்த, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் கூறுகையில், " ஆசிரியர் தேர்வு வாரிய வழி காட்டுதல் படி, சான்று சரிபார்த்தல் பணி நடக்கிறது. கல்வி தகுதிப்படி,"வெய்ட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்கி, இறுதி பட்டியல் தயாரித்து ஒப்படைக்கப்படும். பின்னர் இனசுழற்சி முறையில் பணி நியமன பட்டியல் வெளியாகும். சான்றுகள் சரிபார்ப்ப
Posts
Showing posts from January 23, 2014
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு news update முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டபடி 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி அப் பட்டியலை சமர்ப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கினை 03.02.2014 ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் கூறுகின்றன
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு :செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ் சரிபார்ப்புப்பணி நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில்,"சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது. வழக்கமாக, அரசு பணி நியமனங்களுக்கு, "டிகிரி'சான்று மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களே கேட்கப்படும். "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்று,இதுவரை கேட்டதில்லை. டி.இ.டி.,யில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களிடமும், இந்த நடைமுறைதான்பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது டி.ஆர்.பி.யால் பிறப்பிக்கப்பட்ட, புதிய உத்தரவா