ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) தமிழ் வழி கல்வி சான்று ஒரு விளக்கம் ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) பி.ஏ தமிழ்,பி.லிட்,எம்.ஏ தமிழ்,பி.ஏ ஆங்கிலம், எம்.ஏ ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம்பெற்று பி.எட் பட்டம் பெற்ற தேர்ச்சி அடந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத்தேவையில்லை. ஏனெனில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் பணிநியமனத்தில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு இல்லை.இதனை Tamilnadu Teacher Education University பதிவாளர் அவர்களின் 20.01.2014 தேதியிட்ட அறிவிப்பும் உறுதி செய்துள்ளது. Thanks to www.thamaraithamil.blogspot.com
Posts
Showing posts from January 21, 2014
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) வழக்குகள் NEWS UPDATE 21.01.2014 ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள (TNTET 2013) வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடந்துள்ளனர் .அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளதால், அவர்களின் ரிட் மனுக்களை வாபஸ் பெறவிரும்புவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.எனவே அவர்களின் வழக்குகள் மட்டும் இன்று (21.01.14 ) விசாரணைக்கு வந்தன.அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதல் எஞ்சிய TET வழக்குகள் நாளை பட்டியலிடப்பட்டாலும் விசாரணை நடைபெறுவது கேள்விக்குறியே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனஎ
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் மொத்தம் 30 மையங்களில் ஜனவரி 28-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 29 ஆயிரத்து 528 பேர் இதில் பங்கேற்கின்றனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒவ்வொரு மையத்திலும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் நாளான திங்கள்கிழமை எந்தவிதப் பிரச்னையும் இன்றி சான்றிதழ் சரிபார்ப்பு சுமூகமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் detailed news முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தன முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக நாளைமுதல் தனியாக வெவ்வேறு நாட்களில் அதாவது முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு ஒருநாளிலும், வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 வழக்குகளை படியலிட நீதியரசர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடந்துள்ளனர் .அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவு...