Posts

Showing posts from January 19, 2014
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா? டி.இ.டி. தேர்வர்கள் கவலை! சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,) கவலை அடைந்துள்ளனர். அழைப்பு கடிதம் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20ம் தேதி முதல் 27 வரை 32 மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல் 11ம் தேதி வெளியானது. "தேர்வர் சான்றிதழ்களின் இரு "செட்" நகல்களில் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும். தமிழ் வழியில் படித்தவராக இருந்தால், அதற்குரிய சான்றிதழை பெற்று வர வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. கல்வி சான்றிதழ் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். பள்ளி சான்றிதழில் படித்த பள்ளிய
ஆசிரியர் தகுதித் தேர்வு: 29 ஆயிரம் பேருக்கு நாளைமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக மாநிலம் முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை: "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்குபிளஸ் 2, ஆசிரியர் பட்டயப்
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (முதல் தாள்) 2,60,000 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை (2-ம் தாள்) 4 லட்சம் பேரும் எழுதினர். இதில், முதல் தாளில் 12,596 ஆசிரியர்களும் 2-ம் தாளில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களை நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையே இந்த தடவை இடைநிலை ஆசிரியர் நியமனத்திலும் கடைப்பிடிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, த