முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வு. நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வை நடத்தியது. இந்த காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் ஆகும்.இந்த தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் (தமிழ் நீங்கலாக) நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. பின்னர் வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து டிசம்பர் 23-ம் தேதி தமிழ் தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.முதலில் தேர்வு முடிவு வெளியான பாடங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட தமிழ் பாடத்துக்கும் சான்றிதழ் சரிபார...
Posts
Showing posts from January 17, 2014
- Get link
- X
- Other Apps
16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை அம்போ? அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி-Dinamalar மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது. தொகுப்பூதியம்:இரு ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர், அரசு பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில், இவர்கள், பணியாற்றி வருகின்றனர். அரசு வேலை, என்றாவது ஒரு நாள், பணி நிரந்தரமாகிவிடும் என்ற எண்ணத்தில், அதிக சம்பளத்தில் இருந்தவர்களும், அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர வேலைக்கு வந்தனர். மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ், இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தற்போதைய திட்டம், முடிவுக்கு வந்துவிடும்...