Posts

Showing posts from January 16, 2014
கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி?- மாவட்ட வாரியாக கணக்கெடுக்க முடிவு. கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.  மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் இது பொருந்தும். தமிழகத்தில் தகுதித்தேர்வை நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90 மார்க்) எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்த தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஒரு தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள்கூட, மதிப்பெண்ணை உயர்த்துவதற்காக மீண்டும் தேர்வு எழுதலாம்.  29,600 பேர் தேர்ச்சி கடந்த ஆண்...
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்- சீனியாரிட்டிக்கு பதில்"வெயிட்டேஜ் மதிப்பெண்" அறிமுகம், இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது- The Hindu  அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.   ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் ஆர்.டி.இ. எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரவேண்டுமானால், கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் (வெயிட்டேஜ் மதிப்பெண்) தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.  ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில...