Posts

Showing posts from January 14, 2014
டி.இ.டி. தேர்வில் வென்றவர்களுக்கு ஜன., 20 முதல் சான்று சரிபார்ப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, 18 தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோர் விபரம் சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன., 20 முதல் 27 வரை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில் நடக்கிறது. ஜன.,20 முதல் 22 வரை முதல் தாளில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் 23 முதல் 27 வரை (ஜன.,26 குடியரசு தினம் தவிர) 2ம் தாளில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசியர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, இடம் குறித்த தகவல், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி, பங்கேற்பவர்கள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதை சரிபார்க்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரிபார்ப்பு முடிந்து, "சீனியாரிட்டி லிஸ்ட்" தயாரிக்கப்...
கல்வித்துறை, டி.ஆர்.பி., மீது அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்,என்ற கோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளருக்கு நோட்டீஸ்அனுப்பும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. துறையூர் கொப்பம்பட்டி அசோகன் உட்பட 7 பேர் தாக்கல் செய்த மனு: இளநிலை, முதுகலை பட்டங்கள்,பி.எட்., தேர்ச்சி, வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளோம். அந்த பதிவு மூப்பு அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2010 மே 12 முதல்14 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. நாங்கள் பங்கேற்றோம்.பின், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ.,)பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என, 2010ஆக.,28 ல் உத்தரவிட்டது. இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை, 'ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில், ...
'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில், பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இதில்,தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்...