Posts

Showing posts from January 13, 2014
உடலில் ஆரோக்கியம் பொங்க... முகத்தில் சிரிப்பு பொங்க... வாழ்வில் மகிழ்ச்சி பொங்க... பொங்கட்டும் தை பொங்கல். பொங்கல்போல் நம்வாழ்வும் பொங்கட்டும்....
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி மனிதாபிமான அடிப்படையில் வாய்ப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவை (குறிப்பிட்ட பாடங்கள் நீங்கலாக) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அத்துடன் மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். தமிழ் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது.  இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் 22, 23 மற்றும் நவம்பர் 11-ம் தேதி நடந்தது. இந்நிலையில், தமிழ் பாட தேர்வு முடிவு ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அதன்பிறகு இறுதித் தேர்வு பட்டியலும் வெளியானது. ஆனால், வழக்கு காரணமாக மற்ற பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை.  திருத்தப்பட்ட முடிவு வெளியீட
TRB TNTET PAPPER II CUT OFF CALCULATION ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்)எடுக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.  தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.   பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம்  12–ம் வகுப்பு  90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)  80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்  70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்  60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்  50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்  பட்டப் படிப்பு   70 சதவீதம் மற்றும் அ
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது,சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி,அந்தச் சட்டத்தினை1994ஆம்ஆண்டு அரசமைப்பு (76ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து,சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும்,என்னையுமே சாரும்.  இதே போன்று,ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப் படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். மத்திய அரசின் உத்தரவுப்படி,ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும்.  எனவே,ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வு நட