Posts

Showing posts from January 12, 2014
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு  முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும், மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்  கடந்த வெள்ளியன்று நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த 5 வழக்குகளில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று 5 மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிகின்றது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயன்,இராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது .  ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது. முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது.  முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்...
அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் நிரப்பப்படும்:அமைச்சர் கே.சி.வீரமணி காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார் . வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார். இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக வெளியிட்டது.  பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.  லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 15 ஆயிரம் ஆசிரியருக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த, ஆளும் அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு முடுக்கி விட்டுள்ளதால், பல மாதங்களாக தேங்கியிருந்த தேர்வு முடிவுகள், இரு நாட்களாக, வரிசையாக வெளியிடப்பட்டன.   முதுகலை தேர்வு: மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் நியமனத்தில், ம...