Posts

Showing posts from January 11, 2014
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I சான்றிதழ் சரிபார்ப்புக்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள் அழைப்பு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், தங்களது வழக்குகளில் பெற்ற அசல் உத்தரவோடு 27.01.2014 ல் தாங்கள் தேர்வெழுதிய மாவட்டங்களில் அமந்த மையங்களில்சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டு இருப்பது, தற்காலிக தேர்வு பட்டியல்தான்.இது, வழக்கின் இறுதி முடிவிற்கு உட்பட்டது. இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் தேர்வர்களின் விபரம் TRB வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு 20.01.2014 முதல் 27.01.2014 வரை நடைபெறும் என தெரிகிறது.
2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு & 1,181 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு, மே, 18ல் நடக்கிறது சென்னை : நடப்பு ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ), நேற்று வெளியிட்டது. 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 3,700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது. தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் இந்த ஆண்டு, 23 வகையான தேர்வுகள் நடக்க உள்ளது. இதில், குரூப் 2 பிரிவில், 1,181 இடங்கள்; கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்; ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு, 98 இடங்கள் நிரப்பபட உள்ளன,இவ்வாறு அவர் கூறினார். அறிவிக்கப்பட்டதில், 3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. குரூப் 1, குரூப் 4 உட்பட, எட்டு வகையான தேர்வுகளுக்கு, காலி பணியிடங்கள் விவரம் தெரிவிக்கவில்லை. தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.inஎன்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு. தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை.