ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.தகுதித்தேர்வில் SC/ST பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி மனுவழக்கறிஞர்கள் பழனிமுத்து, ரமேஷ் மற்றும் கருப்பையா மனுதாக்கல் செய்திருந்தனர்.
Posts
Showing posts from January 10, 2014
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. Thanks To, Velan Thangavel
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்*Daily Thanthi News ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் சிலவினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரியாக உள்ளன என்றும் சரியான விடைகளுக்கு மதிப்பெண் போடவில்லை என்றும் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள்.இதில் பல வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.எப்போது சான்றிதழ் சரிபார்க்கப்படும்? எப்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவோம்? எப்போது பணிநியமனம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்ப...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்? ஆசிரியர் தகுதித் தேர்வு திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் தாளுக்கான விடைகளில் ஒரு வினாவும்.இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள...