Posts

Showing posts from January 7, 2014
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்தது.   இன்று (7.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு தன் விசாரணை அனைத்தையும் நிறைவுசெய்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் தீர்ப்பு வெளியாகும்.
வழக்குகள் மீண்டும் ஒத்திவைப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (50 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (07.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் 10.01.14 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதற்கிடையில் ஏற்கனவே நீதியரசர் TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதனடிப்படையில் இவ்வழக்குகள் அனைத்தும் ஒரே நாளில் முடிவு செய்யப்படுமா? அல்லது விசாரணை தொடருமா என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது
TET NEWS UPDATE : today at MADRAS HC MADURAI BENCH  ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (50க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் .இன்று (07.01.14) விசாரணை செய்யபட உள்ளன. வழக்குகளின் நிலை இன்று மாலை தெரியவரும்
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன வழக்குகளை ஒத்திவக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைத்து வழக்குகளையும் வரும் 23 ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு பனியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர். நீதியரசர் . இவ்வழக்குகளைத் தொடுத்த மனுதாரர்களுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கிவைத்து உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை வரும் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. வழக்குகளை ஒத்திவக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைத்து வழக்குகளையும் வரும் 23 ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.   மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு பனியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர். நீதியரசர் . இவ்வழக்குகளைத் தொடுத்த மனுதாரர்களுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கிவைத்து உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை வரும் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன