Posts

Showing posts from January 2, 2014
இரட்டைப்பட்டம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.(Update News)  இன்று (2.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு வழக்கம்போல் 7.1.2014ஐ நோக்கிதன் பயணத்தை தொடர்ந்தது.  இன்று நீதிமன்றத்திற்கு முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே எட்டிப்பிடித்தது. அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால்வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.  இவ்வழக்கு விரைவில் முடிவை எட்ட வேண்டும் என பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இவ்வழக்கு மீண்டும் மீண்டும் பல காரணங்களால் ஒத்திவைக்கப்படுவது அவர்களின் வருத்தத்தை அதிகரித்தவண்ணம் உள்ளது.
மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்ததேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அதே தேதியில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்புவரை பாடம் சொல்லிக்கொடுக்க தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–1 எழுதவேண்டும். 6–வது வகுப்புமுதல் 8–வது வகுப்புவரை பாடம் நடத்த தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–2 எழுதவேண்டும். இரு தாள்களும் எழுத விரும்புவோர் இரு தாள்களையும் எழுதலாம்.