இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை (2.1.2014 )சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண்50ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே அரசு சார்பில் மூன்று வருட பட்டப்படிப்பே சிறந்தது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இனி வருங்காலங்களில் மூன்று வருட பட்டப்படிப்பு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு எடுத்துகொள்ளப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதால் நாளை வழக்கு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.! முடிவு நாளை பார்போம் ..
Posts
Showing posts from January 1, 2014
- Get link
- X
- Other Apps
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது. பிறபாடங்களுக்கு கடந்த மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தபொழுது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கு அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை,பணிஅனுபவம் ஆகியவற்றுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்த்து பெற்ற மொத்தமதிப்பெண் விவரத்தை தேர்வர்களிடம் டிஆர்பி வழங்கியது ஆனால் தமிழ் தேர்வர்களுக்கு அவ்வாறு சான்று எதுவும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வர்கள் எழுத்து தேர்வில் 150 க்கு பெற்ற மதிப்பெண்களுடன், வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்
- Get link
- X
- Other Apps
பள்ளி கல்வித்துறை வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு மண்டல வாரியாக, "லீகல் செல்' மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும்,மண்டல வாரியாக, "லீகல் செல்' அமைக்க,பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது. சம்பளம்,பதவி உயர்வு, நிலுவை தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக,அரசு துறைகள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காதபோது, பாதிக்கப்படும் ஊழியர்கள்,கோர்ட்டை அணுகுகின்றனர். இதுபோன்ற வழக்குகள்,அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும், பள்ளி கல்வித்துறையில், மிக அதிகம். ஒரு கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர், ஆசிரியர்அல்லாத பணியாளர் பல லட்சம் என, பெரிய துறையாக,பள்ளி கல்வித்துறை இருப்பதால், பிரச்னைகளும் அதிகம்.தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் என, பல துறைகள், பள்ளிகல்வி அமைச்சகத்தின் கீழ், இயங்கி வருகின்றன.பல்வேறு பிரச்னைகள் காரணமாக, ஆசிரியரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், கோர்ட்டில்வழக்கு தொடர்கின்றனர். தற்போதைய நிலவரப்படி,தொடக்க கல்வித்துறையில்...