BRTE NEWS :885 ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. 

அன்பார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு வணக்கம். வெற்றி வெற்றி அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .தலைமை இடம் மதுரை,கிளை விழுப்புரம் மகத்தான இனிய வெற்றி.

 மதுரை உயர்நீதிமன்றத்தில் நமது மாநில பொதுச் செயளாலர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று (4.12.2014)தீர்ப்பு அளிக்கப்பட்டது.885 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக 15 நாட்களுக்குள் பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடைமாற்றம் செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். 

மேலும் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டார வள மையத்தில் பணிபுரிந்து 31-10-2014 அன்றுடன் ஓய்வு பெறுவதால் திருவாளர் வி.முனியன் அவர்கள் பணிநீட்டிப்பு கேட்டும் வழங்காமல் மறுத்ததற்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து 27.11.14 அன்று மீண்டும் அதே பணியில் தொடர தீர்ப்பு கிடைத்துள்ளது. 

இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மற்றும் விழுப்புரம் கிளையின் தளபதிகளான ஹரிக்கிருஷ்னன்,கோவிந்தராஜீ,கோவிந்தன்,மணிகண்டன்,அய்யாக்கன்னு,முகையூர் சம்பத், மதுசூதனன், அருணா, சுபலட்சுமி, ரேணுகா, உஷா, சிவக்குமார்,ஆல்பின்ரிஜில்,விக்கிரவான்டி முகமது அலி மற்றும் தமிழ்நாடு அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!நன்றி!நன்றி! 

இவன் என்றென்றும் உங்கள் இனிய நண்பன் தா.வாசுதேவன்,மாநிலத் துணைச் செயளாலர்,அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.மதுரை. கிளை விழுப்புரம் மாவட்டம்.

Comments

Popular posts from this blog