தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதன்படி, கோவையைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் இளநிலை பொறியாளர் பணிக்காக விண்ணப்பித்தார். வருகிற 22-ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்குமாறு இவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, நேர்காணலில் பங்கேற்பதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாகம், தொழில்நுட்பம் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகே கோவை போக்குவரத்துக் கழகம் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது சட்ட விரோதமானது. பணி நியமனம் தொடர்பாக இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களைத் தவிர, இனிமேல் நியமனம் செய்யப்படும் அனைத்து பணிகளும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறக் கூடாது என கடந்த முறை உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுப்படியே பணி நியமனம் நடைபெற வேண்டும். எந்தவொரு அரசுப் பணியும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நிரப்பக் கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் வெளியிட்ட விளம்பரத்தின்படி நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடாது. இந்த வழக்கின் உத்தரவையும், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் நகலையும் போக்குவரத்துக் கழகச் செயலாளர், தமிழக அரசு ஆகியோருக்கு உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படியே பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும், அதன் செயலாளர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
Bt assistant 2010 may cv mudithavarkalin nilai aduthu enna sir.gov enna action edukkuranga?
ReplyDeleteWait and see
ReplyDeleteThanks for your information. Wait pannuvom.god is great.
Delete100% good news will come sir
ReplyDelete