நாட்டில் உயர்கல்வி முறையை மறுசீரமைப்பது குறித்து வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மக்களவையில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
இது தொடர்பாக கேள்வி நேரத்தின் உயர்கல்வியை மறுசீரமைப்பது குறித்து பேசிய ஸ்மிதி இராணி கூறியதாவது:, மாநில கல்வி அமைச்சர்களுடனும், செயலாளர்களுடன் வரும் ஜனவரி 6ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். அரசு, உயர் கல்வியை மறுசீரமைப்பு தொடர்பாக யூஜிசி (Uiversity Grants Commission) மற்றும் ஏஐசிடியில்(All India Council for Technical Education) குழு அமைத்துள்ளது.
"தரமான கல்வி, எளிதில் கிடைக்கும் முயற்சியாக யூஜிசி, நாட்டில் உயர்கல்வி முறையை ஓழுங்குபடுத்தும் அதேவேளையில், யூஜிசியை வலுப்படுத்தி, சீரமைத்தால் அது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை அரசு உணர்ந்துள்ளது" என்றார்.
மேலும் ஏஐடிசிடிசி குழு அளித்த அறிக்கையில், நாட்டில் பல பல்கலைக்கழங்களில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து ஆசிரியர்களை நியமனத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் என்றார். மேலும் ஆசிரியர்களுக்கு புதுமுறையிலான பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.
Comments
Post a Comment