குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம்
இளநிலை உதவியாளர் பதவி, தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரி தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்–4 தேர்வு இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,448 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் மட்டும் 263 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை இத்தேர்வு நடந்தது.
எழும்பூரில் தேர்வு மையங்களை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறியபோது, இன்று நடைபெறும் குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும். இன்றைய தேர்வில் சுமார் 80 சதவீதம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் விடைத்தாள் பதில்கள் 1 வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment