ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு 2க்கான கலந்தாய்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி - IIஏல் அடங்கிய பதவிகளுக்காக தேர்வெழுதியவர்கள் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2013-2014- [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 06.02.2014 மற்றும் 16.04.2014ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 29.06.2014 அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 12.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 29.12.2014 முதல் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கான (2013-14) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 27.01.2015 முதல் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog