FLASH NEWS: TNTET நவம்பர் 10 க்குள் புதிய ஆசிரியர் பட்டியல் வெளியாகிறது?

நவம்பர் 10 ம் தேதிக்குள் இரண்டாவது ஆசிரியர் நியமன பட்டியல் வெளியாகிறது. இந்த பட்டியலில் 90 க்கு மேல் பெற்றவர்களை கொண்டு நிரப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகிறது. 

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 90 க்கு மேல் பெற்ற தேர்வர்களை கொண்டு இந்த ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இவை 2500 பணியிடங்கள் வரை இருக்கலாம் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பணி உயர்வு பெற்ற ஆசிரியர்களால் ஏற்பட்ட காலி பணியிடம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை எனவே 2500 வரை மட்டுமே இந்த பணியிடங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இவற்றில் 5% மதிப்பெண் தளர்வு எதிர்பார்ப்பது கடினம். தமிழுக்கு அதிக பணியிடம் வேண்டி பலர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதால் தமிழுக்கு பணியிடங்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது இருப்பினும் இவை உறுதியாக கூறமுடியாது. 

இந்த பயியிடங்கள் எண்ணிக்கை 2500 தோராயமானதே.இவை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் மட்டுமே. மேலும் நவம்பர் 10 ம் தேதிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படபடுகிறது.ஆனால் அந்த தேதியை தாண்டவும் வாய்ப்பு உள்ளது source: www.gurugulam.com

Comments

Popular posts from this blog