ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு 

ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு சென்னை, அக்.4- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. 

இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது. இதற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. தற்போது ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவா கல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog