ஒ௫ நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?
*மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.
*சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.
*தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
*அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.
*பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும்.
*சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.
*மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
*பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும்
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
*தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.
*தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.
*ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
*எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.
*எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.
*எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என மாணவர்களால் உணர முடியும்.
*ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்கவேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
*படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment