விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை
நீண்டகாலமாக வெளியிடப்படாமல் இருக்கும் விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மையம் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 2,324 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடத்தியது.
இதில் லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் பங்கேற்று எழுதினர். இந்நிலையில் தேர்வு எழுதி, ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
முன்னரே இப்பணிக்கு தேர்வான பலரும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் எழுதி உயர்பதவிகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்களும் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கிராமங்களை கவனித்து வருகின்றனர். ஆகவே, இவர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக பள்ளிக்கூடம்.காம் தேர்வு எழுதிக் காத்திருப்பவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஏஓ தேர்வு முடிவுகளை உடனே வெளியிட்டு பணிநியமனம் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment