அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி !
அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 500 பேர், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று அரைநாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பணி என்பதால், ஒருசில ஆண்டுகளில் பணி நிரந்தரமாகி விடும் என நினைத்து, நல்ல சம்பளத்தில் இருந்த பலரும் அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்தனர்.
உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசைஆசிரியர் உள்ளிட்டோரும், இந்தப் பகுதிநேர பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு நிதியில் இருந்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் வழங்கி வருகிறது. பணியில் சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், பணி நிரந்தரமாவதற்கான அறிகுறி தெரியாததால், பலரும் விரக்தி அடைந்தனர். பகுதிநேர ஆசிரியர் அமைப்புகள், தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும், அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த விரக்தியால், இதுவரை, 2,000 பேர், வேலையை ராஜினாமா செய்து விட்டு, பழைய வேலைக்கு திரும்பி உள்ளனர். நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெற வழி உள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு அதுவும் இல்லை. இதனால், நீண்ட தொலைவு பயண பிரச்னையாலும், பலர் வேலையை விட்டுள்ளனர்.
இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த உஷா கூறியதாவது:சொந்த ஊர், திருச்சி; புகுந்த இடம், கோவை. ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அரசு வேலையாக இருக்கிறதே பணி நிரந்தரமாகும் என்ற ஆவலில், வேலையில் சேர்ந்தேன்.
திருச்சி, முட்டத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர் வேலை. வாரத்தில், மூன்று நாள் திருச்சியில் தங்குவதும், பின், கோவை செல்வதுமாக இருந்தேன்; முடியவில்லை. இரண்டாவது முறையாக, கர்ப்பம் ஆன நிலையில், நீண்ட துார பயணத்தால், 'அபார்ஷன்' ஆகிவிட்டது.இதனால் உடலும், மனமும் பாதிக்கப்பட்டு, கடைசியில் வேலையை உதறினேன்.இவ்வாறு, உஷா கூறினார்.
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே, 2,000 பணியிடம் காலியாக உள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர், வேலையை ராஜினாமா செய்தது உண்மையே. பகுதிநேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்வதற்கு, வாய்ப்பு இல்லை' என்றார்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment