1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன
1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,807 முதுநிலை பட்டதாரிகள் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அந்த இடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
இதையொட்டி அந்த ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளி கல்வித்துறை ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது.
விண்ணப்பங்கள் விற்பனை கடந்த 10-ந் தேதி தொடங்கியது. ஆர்வத்துடன் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். கடைசி நாள் விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் நேற்று விண்ணப்பிப்போர் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 39 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.
இதுவரை ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் என்ற விவரம் இன்று (வியாழக்கிழமை) தெரியும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எழுத்து தேர்வு ஜனவரி மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

Comments
Post a Comment